Watch Video: நீர்வீழ்ச்சி அருகே ரீல்ஸ் எடுத்த நபர், கால் இடறி ஆற்றில் விழுந்து மாயம்! தேடும் பணி தீவிரம்!

இன்ஸ்டாகிராம் ரீல் செய்வதற்காக நீர்வீழ்ச்சி அருகே நின்றுகொண்டிருந்த நபர், எதிர்பாராதவிதமாக கால் இடறி ஆற்றில் விழுந்து மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Share this Video

கர்நாடக மாநிலத்தில் தொடர் மழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் அணைகள், ஆறுகள் நிரம்பி வருகின்றன. புகழ்வாய்ந்த ஜோக் நீர்வீழ்ச்சி, அரசினகுடி நீர்வீழ்ச்சி போன்றவைகளிலும் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

இந்நிலையில், கொல்லூர் கிராமத்திலிருந்து சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள அரசினகுடி நீர்வீழ்சியை கண்டு ரசித்துக்கொண்டிருந்த இளைஞர், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் எடுப்பதற்காக மொபைலை நண்பரிடம் கொடுத்துவிட்டு ஒரு பாறையில் ஏறி நின்று நீர்வீழ்ச்சியை ரசித்துக்கொண்டிருந்தார். அப்போது, திரும்பும் போது எதிர்பாராதவிமாக கால் இடறி ஆற்றில் விழுந்து மாயமானார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

இச்சம்பவத்தைத்தொடர்ந்து, அந்த இளைஞரை தேடும் பணி 2வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Related Video