Viral Video : சிறு பாத்திரத்தில் சிக்கிய சிறுவன்! பாத்திரத்தை வெட்டி எடுத்து சிறுவனை மீட்ட தீயணைப்பு துறை!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே பாத்திரத்தில் சிக்கிய இரண்டரை வயது குழந்தை பத்திரமாக மீட்பு. சமூக வலைதளங்களில் வைரலான வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டது.
 

Share this Video

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே நெய்யாற்றன்கரை பகுதியைச் சேர்ந்த அபிஜித் அமிர்தா தம்பதியரின் 2 1/2 வயது குழந்தை இஷா மையி. இந்தக் குழந்தை வீட்டினுள் விளையாடிக் கொண்டிருந்த போது அங்கே வைக்கப்பட்டு இருந்த பாத்திரத்தினுள் அமர்வதற்காக முயற்சித்தது. ஒரு வழியாக பார்த்தினுள் நுழைந்த சிறுவன், பின்னர் வெளியேற முடியாமல் தவித்து அலறியுள்ளார். குழந்தையின் அலறல் சத்தத்தை கேட்டு ஓடி வந்த பெற்றோர் மீட்க முயற்சித்து தோல்வியடைந்தனர். பின்னர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், சுமார் ஒரு மணி நேரம் போராடி அந்த பாத்திரத்தை வெட்டி எடுத்து சிறுவனை மீட்டனர். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Video