குஜராத்தில் 160 கி.மீ. வேகத்தில் சீறி பாய்ந்த சொகுசு கார்; 9 பேர் பரிதாப பலி

குஜராத்தில் பாலம் ஒன்றில் ஏற்பட்ட விபத்தை சரி செய்துகொண்டிருந்த நபர்கள் மீது சொகுசு கார் 160 கி.மீ. வேகத்தில் மோதிய விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

First Published Jul 20, 2023, 5:32 PM IST | Last Updated Jul 20, 2023, 5:32 PM IST

குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே சார்கெஜ், காந்திநகர் நெடுஞ்சாலையில் உள்ள இஸ்கான் மேம்பாலத்தில் நள்ளிரவு 1 மணியளவில் டிராக்டர் ஒன்று பாலத்தின் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனைத் தொடர்ந்து விபத்தில் சிக்கிய டிராக்டரை அப்பகுதி மக்கள் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் அவ்வழியாக சென்றவர்கள் பலரும் விபத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த சொகுசு கார் 160 கி.மீ. வேகத்தில் கூட்டத்திற்குள் புகுந்தது. இந்த விபத்தில் காவலர் உட்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 10 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Video Top Stories