Asianet News TamilAsianet News Tamil

ஆந்திராவில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றி வந்த ஆட்டோ லாரியில் மோதி தூக்கி வீசியதில் 6 குழந்தைகள் படுகாயம்

ஆந்திர மாநிலத்தில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிக் கொண்டு வேகமாக வந்த ஆட்டோ லாரி மீது மோதி தூக்கி வீசப்பட்டதில் 6 குழந்தைகள் படுகாயமடைந்தனர்.

First Published Nov 22, 2023, 5:54 PM IST | Last Updated Nov 22, 2023, 5:54 PM IST

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள சங்கம் சரத் திரையரங்கம் அருகே  பள்ளிக்கு குழந்தைகளை ஏற்றி சென்ற ஆட்டோ லாரியின் பக்கவாட்டில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஆட்டோ நசுங்கி அதில் இருந்து குழந்தைகள் தூக்கி வீசப்பட்டனர். விபத்தில் ஆட்டோவில் பயணித்த ஆறு குழந்தைகள் படுகாயம் அடைந்த நிலையில் அவர்களில் இரண்டு பேர் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த உடன் அங்கு வந்து சேர்ந்த போலீசார் குழந்தைகளை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. காயமடைந்தவர்களில் இருவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து பற்றி வழக்கு பதிவு செய்துள்ள விசாகப்பட்டினம் போலீசார்  விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

Video Top Stories