கர்நாடகாவில் கார் மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட பள்ளி மாணவிகள்; பரபரப்பான சிசிடிவி காட்சிகள்

கர்நாடகா மாநிலத்தில் வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனம் மற்றும் நடந்து சென்ற பள்ளி மாணவிகள் மீது மோதிய விபத்தில் ஒருவர் படுகாயமடைந்தார்.

Share this Video

கர்நாடகா மாநிலம் ராய்ச்சூர் மாவடத்தின் குலசும்பி பேராங்காய் பகுதியைச் சேர்ந்தவர் சிவராஜ் பாட்டீல். இவர் சம்பவத்தன்று தனது இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தார். அப்போது சாலையில் திரும்ப முற்பட்டபோது எதிர்பாராத விதமாக அவ்வழியாக வந்த கார் ஒன்று இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதிவிட்டு சாலையோரம் நடந்து சென்ற 2 மாணவிகள் மீது மோதியது.

இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த சிவராஜ் மற்றும் 2 பள்ளி மாணவிகள் தூக்கி வீசப்பட்டனர். இதில் சிவராஜ் படுகாயமடைந்தார். மாணவிகள் இருவரும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Video