Asianet News TamilAsianet News Tamil

Watch : கொச்சியில் 12,000 கோடி மதிப்புள்ள 2500 கிலோ உயர் ரக போதைப்பொருள் பறிமுதல்!

கேரளமாநிலம் கொச்சியில் 12,000 கோடி மதிப்புள்ள 2,500கிலோ உயர் தர போதைப்பொருள்கள்பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
 

இந்திய கடற்பகுதி வழியாக போதை பொருள்கள் கடத்தப்படுவதை தடுக்க போதைப்பொருள் கடத்தல்தடுப்பு பிரிவு, மற்றும் கடற்படை இணைந்து ஆப்ரேஷன் சமுத்திர குப்த பெயரில், தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் உளவு துறை அளித்த ரகசிய தகவலின் அடிப்படையில் கொச்சி ஆழ்கடலில் ஆப்கானிஸ்தான் கடல் மார்க்கமாக வந்த mother ship என்கின்ற கப்பலை அதிகாரிகள் வழி மறித்து சோதனை செய்தனர். அதில், 134 சாக்கு மூட்டைகளில் மொத்தம் 2500 கிலோ
Methamphetamine என்ற உயர் தர போதை பொருள் இருந்தது கண்டுபடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது. கப்பலில் இருந்தவர்கள் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களின் இன்றைய சந்தை மதிப்புப்படி சுமார் 12000 கோடி ரூபாய் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Video Top Stories