Video: தந்தை கண்முன்னே 18 வயது மகள் கடத்தல்.. கோவிலுக்கு சென்று திரும்பும் வழியில் அதிர்ச்சி சம்பவம் !

18 வயது மகள் தந்தை கண்முன்னே கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.

First Published Dec 20, 2022, 6:35 PM IST | Last Updated Dec 20, 2022, 6:35 PM IST

தெலுங்கானா மாநிலம் ராஜன்னா சிர்சில்லா மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில், இன்று அதிகாலை 5:30 மணியளவில் சந்திரய்யா என்ற தந்தையும், அவரின் மகளான ஷாலினியும் கோவிலுக்கு சென்றுள்ளனர். பிறகு கோவிலில் பூஜையை முடித்துவிட்டு தனது மகளுடன் சந்திரய்யா வெளியே வந்துள்ளார்.

அப்போது, அவர்களை காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து, காரில் அந்த பெண்ணை கடத்தி சென்றனர்.  இந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. இதுகுறித்து காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்ததாவது,  சிசிடிவி காட்சிகளில் மூன்று ஆண்கள் காரில் இருந்து இறங்கி, தந்தையைத் தள்ளிவிட்டு அந்தப் பெண்ணைப் பிடித்துக் கொண்டு, பின்சீட்டில் தள்ளிவிட்டு வேகமாகச் செல்வதைக் காட்டுகிறது.

அந்த பெண்ணை கண்டுபிடிக்க 6 தனிப்படைகளை அமைத்துள்ளனர்.  கடத்தப்பட்ட இளம்பெண் கடந்த காலத்தில் ஓடியுள்ளார் என்றும், தற்போது அவருக்கு 18 வயது ஆனதால் அவரது காதலன் கடத்தி இருக்கலாம் என்றும் காவல்துறையினர் சந்தேகித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

இதையும் படிங்க..அப்போ இருந்த இலங்கை போராட்ட களமா இது.? அனைவரையும் ஆச்சரியப்படுத்திய வைரல் புகைப்படம் !!

இதையும் படிங்க..அண்ணாமலை கட்டிய ரபேல் வாட்ச்.. ரபேல் விமான பாகத்தில் செய்யலையா.? உண்மை இதுதான் மக்களே !

Video Top Stories