தைப்பூசத்தை முன்னிட்டு பழனி முருகன் கோயில் ஓ.பன்னீர்செல்வம் சாமி தரிசனம்!!

தைப்பூசத்தை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் சாமி தரிசனம் செய்தார். 

Share this Video

தைப்பூசத்தை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் சாமி தரிசனம் செய்தார். பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா இன்று விமர்சையாக நடைபெற்றது. அதிமுக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் தைப்பூச தினத்தில் பழனி முருகனை தரிசனம் செய்ய பழனிக்கு வருகை தந்தார். மலை அடிவாரத்தில் இருந்து ரோப் கார் மூலமாக மலை மீது சென்ற ஓ.பன்னீர்செல்வம், அவரது சகோதரர் ராஜா மற்றும் குடும்பத்தினர் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் செய்தியாளர்களை ஓ. பன்னீர்செல்வத்தை சந்தித்து வேட்பாளர் வாபஸ் வாங்கியது தொடர்பாக கேள்வி எழுப்பிய போது அறிக்கையாக வழங்குவதாக தெரிவித்து விட்டு சென்றார். 

Related Video