Asianet News TamilAsianet News Tamil

Watch : அடுத்த இலக்கை நோக்கி அடியெடுத்து வைத்த ஏசியாநெட் நியூஸ்-இன் அம்ரித் மஹோத்சவ் யாத்திரை!

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றை இளம் தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்லும் வகையில் ஏசியாநெட் நியூஸ் மற்றும் NCC இணைந்து நடத்திய அம்ரித் மஹோத்சவ யாத்திரை, கர்நாடகாவில் தனது 75வது ஆண்டு பயணத்தை நிறைவு செய்துள்ளது.
 

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் 75 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு ஏசியாநெட் நியூஸ் மற்றும் என்சிசி இணைந்து 'வஜ்ர ஜெயந்தி யாத்திரையைத் தொடங்கியுள்ளன. நாட்டின் சுதந்திரப் போராட்ட நினைவுச் சின்னங்கள், ராணுவ தளங்கள், விவசாயம், கலாச்சாரம் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி மையங்களை ஆராய்ந்து ஒரு பெரிய தொடக்கமாக 20 என்சிசி கேடட்களுடன் இந்த யாத்திரையை தொடங்கியது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கடந்த ஜூன் 14ம் தேதி தொடங்கிய இந்த யாத்திரையை கேரளா ஆளுநர் ஆரிப் முகமது கான் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அதைத்தொடர்ந்து, இந்த யாத்திரை கார்நாடக மாநிலம் பெங்களூருவிற்கு வந்தடைந்தது. தொடர்ந்து பெங்களூரில் ராஜ்பவனில், India@75 கர்நாடகா கொடியேற்ற விழா நடைபெற்றது. அதில், கர்நாடக மாநில ஆளுநர் தவர்சந்த் கெலாட் கலந்துகொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தார். தற்போது, கர்நாடகாவில் பயணத்தை முடித்துவிட்டு அடுத்த மாநிலங்களுக்குள் நுழைவதற்கான யாத்திரையின் கொடியை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.அசோக் ஒப்படைத்தார். பயணத்தில் பங்கேற்ற என்சிசி கேடட்களுக்கும் சான்றிதழ்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் கன்னட பிரபா- சுவர்ணா நியூஸ் தலைமை ஆசிரியர் ரவி ஹெக்டே, மார்கெட்டிங் பிரிவு துணைத் தலைவர் அனில் சுரேந்திரா, பிரபல மருத்துவர் ரிஷிகேஷ் டாம்லே மற்றும் பலர் பங்கேற்றனர். இந்த யாத்திரை ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், டெல்லி, ஹரியானா, சண்டிகர் மற்றும் இமாச்சலப் பிரதேசம் வழியாகப் பயணித்து, லடாக்கில் பயணம் முடிவடைய உள்ளது.
 

Video Top Stories