ஆழ்கடலுக்குள் தேசிய கொடிக்கு நீச்சல் வீரர்கள் மரியாதை; புதுவையில் அசத்தல்

சென்னை, புதுச்சேரி ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் சுதந்திர தினத்தை முன்னிட்டு கடலுக்கு அடியில் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினர்.

First Published Aug 15, 2023, 2:55 PM IST | Last Updated Aug 15, 2023, 2:55 PM IST

சென்னை மற்றும் புதுச்சேரியில் ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் கிழக்கு கடற்கரைசாலை  நீலாங்கரை கடலில் 1 கிலோ மீட்டர் தூரத்தில், 60 அடி ஆழத்தில் கடலுக்குள் சென்று தேசிய கொடியை ஏற்றி தங்களது நட்டு பற்றை வெளிபடுத்தி அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

மேலும் ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளர்  அரவிந்த் ஏற்கனவே செஸ் ஒலிம்பியாட், உலக யோகா தினம், காதலர் தினம், சர்வதேச கிரிக்கெட் போட்டி, கடல் தூய்மை போன்றவற்றிற்கு விழிப்புணர்வை ஏற்படுத்த பல நிகழ்வுகளை கடலுக்கு அடியில் நிகழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

Video Top Stories