ஊராட்சித் தலைவராகும் கல்லூரி மாணவி,பாட்டி , திருநங்கை.. களைகட்டிய தேர்தல் முடிவு..!வீடியோ

ஊராட்சித் தலைவராகும் கல்லூரி மாணவி,பாட்டி , திருநங்கை..  களைகட்டிய தேர்தல் முடிவு..!வீடியோ

First Published Jan 2, 2020, 6:35 PM IST | Last Updated Jan 2, 2020, 6:35 PM IST

நீண்ட இழுபறிக்கு பிறகு தமிழகத்தில் ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சித்தேர்தல் இரண்டு கட்டங்களாக கடந்த மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து எஞ்சிய 27 மாவட்டங்களிலும் ஊராட்சி பதவிகளுக்கான தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. திமுகவும் அதிமுகவும் சம பலத்துடன் மாறி மாறி முன்னிலையில் இருக்கின்றன.

இந்தநிலையில் மதுரை மாவட்டத்தில் 79 வயது மூதாட்டி ஒருவர் பஞ்சாயத்து தலைவராக வெற்றிபெற்றுள்ளார். மதுரை மாவட்டம் மேலூர் ஒன்றியத்தில் இருக்கும் அரிட்டாபட்டி ஊராட்சிக்கு தேர்தல் நடைபெற்றது. இங்கு தலைவர் பதவிக்கு வீரம்மாள் என்கிற 79 வயது மூதாட்டி போட்டியிட முடிவு செய்திருந்தார். அதற்காக வேட்புமனு தாக்கல் செய்த அவர் தீவிர வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டிருந்தார். தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

7 வேட்பாளர்கள் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட போதிலும் தொடக்கம் முதலே வீரம்மாள் முன்னிலை வகித்து வந்தார். இறுதியில் 195 வாக்குகள் அதிகம் பெற்று அவர் ஊராட்சி மன்ற தலைவராக வெற்றி பெற்றார். இதுவரை 2 முறை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்திருக்கும் அவர் மூன்றாவது முறையாக மீண்டும் போட்டியிட்டு தற்போது வெற்றி பெற்றுள்ளார். வெற்றியை தனது பகுதியின் இளைஞர்களுக்கு காணிக்கையாக்குவதாக கூறிய வீரம்மாள், விவசாயம் மற்றும் தண்ணீர் பிரச்னையை தீர்ப்பதே தனது முதல் வேலை என தெரிவித்துள்ளார்.

அதைபோல் சென்னை: தமிழக ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கிய நிலையில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் 2ஆவது வார்டில் திருநங்கை ரியா வெற்றி பெற்றுள்ளார்.

மேலும் கிருஷ்ணகிரி மாவட்டம் கே என் தொட்டி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சுயேச்சை வெற்றி. 21 வயது கல்லூரி மாணவி ஜெய்சந்தியா ராணி வெற்றி பெற்றார் என்பது குறிப்படத்தக்கது

Video Top Stories