திருடப்போன வீட்டில் கொள்ளையனுக்கு நடந்த அநியாயம்.. ரிஸ்க் எடுத்தும் ஒரு பிரயோஜனமும் இல்லை..! வெளியான சிசிடிவி..
சென்னை: தாம்பரத்தில் வீட்டின் பூட்டை உடைத்த கொள்ளையன் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டிருப்பதை பார்த்துவிட்டு தலையில் அடித்துக்கொண்டு கொள்ளையடிக்காமல் திரும்பிச் சென்ற சிசிடிவி வெளியாகியுள்ளது.
சென்னை தாம்பரம் சானடோரியம் பகுதியில் ஜெயா நகர் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் ஸ்ரீதர் - லாவண்யா தம்பதியினர், இவ்ரகள் தங்கள் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றுள்ளனர்.வீட்டில் யாரும் இல்லாததை தெரிந்துக்கொண்ட அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்,
அதிகாலை சுமார் இரண்டரை மணி அளவில் கையில் இரும்புக் கம்பியுடன் வந்த அந்த நபர் வெளிக் கதவின் பூட்டை உடைக்கும்போது வீட்டின் முன்பக்கம் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை பார்த்து அதிர்ச்சியடைந்து தலையில் அடித்துக் கொண்டான்.
இதையடுத்து, தனது முகம் சிசிடிவி கேமராவில் பதிவிட்டதே என்ற அச்சத்தில் தலையில் அடித்துக்கொண்டு, தனது கொள்ளை முயற்சியை கைவிட்டு விட்டு அங்கிருந்து தப்பி சென்றான்.வெளியூர் சென்றிருந்த ஸ்ரீதர் வீடு திரும்பியபோது பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது இதை அவர் பார்த்துள்ளார்.
இந்த சிசிடிவி காட்சியைக் கொண்டு சிட்லப்பாக்கம் போலீஸார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.