தொடரும் அதிர்ச்சி.. சில மணி நேரத்தில் தெலங்கானாவில் எரிக்கப்பட்ட மற்றொரு பெண் சடலம்.. வெளியான கதிகலங்க வைக்கும் வீடியோ..!

தெலங்கானாவில் தொடரும் அதிர்ச்சி..அதே பகுதியில் எரிக்கப்பட்ட மற்றொரு பெண் சடலம்.. வெளியான கதிகலங்க வைக்கும் வீடியோ..!

First Published Nov 30, 2019, 11:04 AM IST | Last Updated Nov 30, 2019, 11:17 AM IST

மருத்துவர் பிரியங்கா கொலை செய்யப்பட்ட அதே பகுதியிலிருந்து மற்றொரு பெண் சடலம் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐதராபாத்தைச் சேர்ந்த அரசு பெண் மருத்துவர், நேற்று முன்தினம் பணி முடிந்து இரவு வீட்டுக்குத் திரும்பியபோது, இருசக்கர வாகனத்தின் டயர் பஞ்சரானது. இதனால், பதற்றத்துடன் நடுரோட்டில் தவித்துக்கொண்டிருந்த அவருக்கு லாரி ஓட்டுநரும் கிளினரும் உதவி செய்ய முன் வந்துள்ளனர். பின்னர், அவர்கள் மீது சந்தேகம் அடைந்த அந்த பெண், தன் தங்கையிடம் செல்போனில் பேசியுள்ளார். அப்பெண்ணின் தங்கை அருகிலுள்ள டோல்கேட்டுக்குச் சென்று பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.

சில நிமிடங்கள் கழித்து அக்காவை தொடர்பு கொள்ள முயன்ற போது அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனே காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். வழக்குப்பதிவு செய்து மருத்துவரைத் தேடி வந்த போலீசார் அப்பகுதியில் உள்ள மேம்பாலத்திற்குக் கீழே எரிந்த நிலையில் அப்பெண் உடல் இருந்தது. இந்த சம்பவம் தெலங்கானா மாநிலத்தை உலுக்கியது. இதனையடுத்து, அந்த பெண்ணின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பிரேத பரிசோதனை அறிக்கையில் அப்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, துப்பட்டாவால் அவர் கழுத்தை நெறித்து கொன்று பின் எரிக்கப்பட்டது தெரியவந்தது. இந்த கொலை தொடர்பாக குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டது. பெண் மருத்துவரின் தங்கை அளித்த தகவலின் அடிப்படையில், ஷாத்நகரில் பதிவான சிசிடிவி காட்சிகளைக் ஆய்வு செய்தனர். இதில், பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த லாரி ஓட்டுநர், கிளினர் ஆகிய இருவரையும் கண்டுபிடித்து போலீசார் கைது செய்தனர். மேலும், இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த சம்பவத்தினால் ஏற்பட்ட அதிர்ச்சியே இன்னும் குறையாத நிலையில், தற்போது அதே பகுதியில் எரிக்கப்பட்ட நிலையில் மற்றொரு பெண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது அனைவரையும் உறைய வைத்துள்ளது.  தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் பாதி எரிக்கப்பட்ட நிலையில் இருந்த அந்த பெண் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

Video Top Stories