திருடச் சென்ற வீட்டில் உல்லாசம்.. சிசிடிவி காட்சிகளை கண்டு அதிர்ச்சியான உரிமையாளர்..!பரபரப்பு வீடியோ..

கொள்ளையன் ஒருவன் திருடச் சென்ற வீட்டில் ஆனந்தமாக இருந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகின பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

First Published Sep 19, 2019, 12:57 PM IST | Last Updated Sep 19, 2019, 12:57 PM IST

விழுப்புரம் சுதாகர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோ இவர் அரசுப் பள்ளியில் முதுகலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். குற்ற சம்பவங்களை தடுக்க போலீசார் அறிவுறுத்தலின்படி தனது வீட்டை சுற்றிலும் ஆறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி இருந்தார்.  இந்த நிலையில் ஆசிரியர் இளங்கோ நேற்று முன்தினம் இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டில் ஒரு அறையில் படுத்து உரிங்கியுள்ளார் 

 நள்ளிரவில் டிப்டாப் உடையணிந்த படி கொள்ளையன் ஒருவன் ஆசிரியர் வீட்டுக்குள் புகுந்தான் பின்னர் அவன் வீட்டின் இரண்டாவது மாடிக்கு சென்றான் அங்கு உள்ள அறைக்கு சென்று ஏதேனும் பொருட்கள் இருக்கிறதா என்று தேடி பார்த்து உள்ளான்  ஆனால் அங்கு அவனுக்கு எந்த பொருளும் கிடைக்காத நிலையில் விரக்தியுடன் அறையை விட்டு வெளியே வந்துள்ளான்  அப்போது அங்குள்ள ஊஞ்சலை பார்த்து அவனுக்கு ஊஞ்சலில் அட ஆசை ஏற்பட்டு உள்ளது.

பின்னர்  அவன் அந்த ஊஞ்சலில் அமர்ந்து சிறிது நேரம் ஆனந்தமாக ஆடி மகிழ்ந்தது உள்ளான்.பின்னர் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்து வீட்டின் முன்புற பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களில் உள்ள  பெட்ரோல் திருடி விட்டு சென்று உள்ளான்.

இந்நிலையில் நேற்று காலை ஆசிரியர் தனது வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தார் அப்போது டிப்டாப்யகா  வாலிபர் ஒருவர் நள்ளிரவு 12.30 மணி அளவில் வீட்டின் இரண்டாவது மாடிக்கு வந்து அங்குள்ள ஊஞ்சலில் 3 நிமிடம் அமர்ந்து ஆடி உள்ளதும் பின்னர் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்து அவன் அங்கு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களில் பெட்ரோல் திருடிய சென்றதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார் 

இது குறித்து அவர் விழுப்புரம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார் அதன் அடிப்படையில்  கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்