இருட்டில் இழுத்துச் சென்று வெளுத்த போலீஸ்.. கையெடுத்து கும்பிட்டு கதறும் தாய்..! பதறவைக்கும் வீடியோ
இருட்டில் இழுத்துச் சென்று வெளுத்த போலீஸ்.. கையெடுத்து கும்பிட்டு கதறும் தாய்..! பதறவைக்கும் வீடியோ
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தாலுக்கா மூங்கில் பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி மகன் சக்திவேல் இவர் பாமக ஒன்றிய செயலாளராக பொறுப்பில் இருந்து வருகிறார் இவர் நேற்று இரவு குடும்பத்துடன் வீட்டில் இருந்துள்ளார்.
அப்போது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது நேற்று இரவு சுமார் 11 மணி அளவில் அந்த கிராமத்திலுள்ள மின்மாற்றியில் போலீசார்கள் மின்தடை ஏற்படுத்தி சின்னசேலம் இன்ஸ்பெக்டர் திரு சுதாகர் மற்றும் மூன்று போலீசார்கள் போலீஸ் உடையில் அணிந்த செல்லாமல் மப்டி உடையில் ( டீ சர்ட்) வீட்டுக்கு சென்ற இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் அத்துமீறி சக்திவேல் வீட்டின் உள்ளே சென்ற இன்ஸ்பெக்டர் சுதாகர் பாமக நிர்வாகி சக்திவேலை சட்டையைப் பிடித்துக்கொண்டு சரமாரியாக கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட நபர் சக்திவேல் எதற்காக என்னை அடிக்கிறீர்கள் கதறி உள்ளார் இதனை அங்கிருந்த சக்திவேல் நண்பர்கள் வீடியோவில் பதிவு செய்துள்ளனர் வெகுநேரமாக இருட்டில் கொடூரமாக தாக்கி காரில் ஏற்றியபோது சக்திவேலின் தந்தை மற்றும் தாய் ஆகிய இருவரும் இன்ஸ்பெக்டர் காலில் விழுந்து கதறி அழுது என் மகனை கொன்றுவிடாதீர்கள் எதற்காக என் மகனை அடித்து இழுத்துச் செல்கிறாய் தயவு செய்து விட்டுவிடுங்கள் என கெஞ்சி கதறியும் விடவில்லை.
காவல் நிலையம் அழைத்துச் சென்றுள்ளனர் இது சம்பந்தமாக போலீசாரிடம் விசாரித்தபோது அவர்கள் கூறியதாவது பாமக நிர்வாகி சக்திவேல் இன்ஸ்பெக்டர் சுதாகர் மீது பேஸ்புக்கில் ஒன்று பதிவு செய்துள்ளார் பாமக போராட்டம் எப்படி இருக்கும் என இன்ஸ்பெக்டர் சுதாகர் கேட்கிறார் பாமக போராட்டம் போக போக தெரியும் என எச்சரித்து பதிவு ஒன்று பேஸ்புக்கில் பதிவு செய்து உள்ளார் அதன் விரக்தியால் பாமக நிர்வாகியை இன்ஸ்பெக்டர் இரவு தாக்கி அழைத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
ஊரடங்கு உத்தரவை மீறி ஊர் சுற்றும் வாலிபர்களை அடிக்காதீர்கள் அவமானம் படுத்தாதீர்கள் என காவல்துறை டிஜிபி அவர்கள் காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி எச்சரிக்கை விடுத்து வருகிறார் இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கும் விதமாக வீட்டிலிருந்த ஒரு வாலிபரை போலீஸார் மஃப்டி உடையில் சென்று கிராமத்தில் மின் தடை ஏற்படுத்தி கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் சின்னசேலம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கிராமத்தை விட்டு சென்றதும் சற்று நேரத்தில் மின் தடை நீங்கியதாக அந்தக் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர் மின்மாற்றி பகுதியில் இரண்டு போலீசார்கள் நின்றுகொண்டிருந்ததாக அவ்வழியாக சென்ற மக்கள் பார்த்ததாக கூறப்படுகிறது.