மனைவின் நடத்தையில் சந்தேகம்; மகளை கொலை செய்த கொடூர தந்தை கைது

மதுரை மாவட்டம் ஜெய்ஹிந்த் புரம் பகுதியில் மனைவின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தைத் தொடர்ந்து தனது 8 வயது மகளை கொடூரமாக கொலை செய்து வீட்டின் பரண் மீது வைத்துவிட்டுச் சென்ற தந்தையை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
 

First Published Oct 7, 2022, 11:13 AM IST | Last Updated Oct 7, 2022, 11:13 AM IST

மதுரை மாவட்டம் ஜெய்ஹிந்த் புரத்தைச் சேர்ந்தவர்கள் காளிமுத்து, பிரியதர்ஷினி தம்பதி. இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகள் இருந்தார். காளிமுத்து கடை ஒன்றில் டெய்லராக வேலை பார்த்து வந்துள்ளார். மனைவி பிரியதர்ஷினி பாத்திரக்கடை ஒன்றில் விற்பனையாளராக பணியாற்றியுள்ளார். இதனிடையே பிரியதர்ஷினியின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டு கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

நெல்லை மதுபோதையில் தகராறு செய்த ஊர்காவல் படை வீரர் இடை நீக்கம்

இந்நிலையில் கடந்த மாதம் 23ம் தேதி இவர்களது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சந்தேகத்தின் அடிப்படையில் அங்கு வந்து பார்த்த காவல் துறையினர் அதிர்ச்சியடைந்தனர். ஏனெனில் வீட்டின் பரண் மீது வைக்கப்பட்டிருந்த வாளி ஒன்றில் 8 வயது சிறுமி கொலை செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளார். அழுகிய நிலையில் மீட்கப்பட்ட உடலை காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

திருச்சி இளைஞரின் உயிரிழப்புக்கு ஆளுநர் தான் காரணம்.. பகீர் கிளப்பும் அன்புமணி ராமதாஸ்..!

தலைமறைவாக இருந்த காளிமுத்துவை நேற்று காவல் துறையினர் அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தனது மனைவியின் நடவடிக்கைகள் குறித்து மகளிடம் கூறி புலம்பினேன். அதற்கு நாம் இருவரும் இறந்துவிடலாம் என்று மகள் ஆலோசனை கூறினார். அதன் அடிப்படையில் மகளை கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டேன். பின்பு நானும் ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணத்தில் வீட்டை விட்டு வெளியேறினேன். ஆனால், பயம் காரணமாக தற்கொலை செய்யாமல் சுற்றித் திரிவதாக குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.

 

Video Top Stories