கொத்துக்கொத்தாக வாரி குவித்த நகைகள்.. குரங்கு மூஞ்சி கொள்ளையர்களின் வீடியோ..!

திருச்சி லலிதா ஜுவல்லரி குரங்கு முகமூடி அணிந்து கோடி கணக்கு மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி..

First Published Oct 3, 2019, 7:04 PM IST | Last Updated Oct 3, 2019, 7:04 PM IST

திருச்சியில் உள்ள லலிதா ஜுவல்லரியில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற கொள்ளைசம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஓர்  புதிய தகவல் தற்போது கிடைத்து உள்ளது. 

இந்த  கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை  பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தனிப்படை போலீசார் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 6 இளைஞர்கள் இரண்டு நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டையில் உள்ள தனியார் விடுதியில் கம்பளி போர்வை விற்பனை செய்வதற்காக வந்து தங்கி உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

தகவலின்பேரில் 10 கும்  மேற்பட்ட போலீசாரை கொண்ட தனிப்படை புதுக்கோட்டைக்கு வந்தது . அவர்கள் புதுக்கோட்டை பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் சோதனைக்காக சென்றனர் . 

அங்கு ஒரு அறையில் தங்கியிருந்த வடமாநில இளைஞர்கள் 5 பேரிடம் போலீசார் விசாரணை செய்து கொண்டிருந்தனர். அப்போது சாப்பாடு வாங்கிக்கொண்டு அறைக்குச் சென்ற மற்றொரு இளைஞர் அப்ஜுன்ஷேக் என்பவர் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார் . 

அப்போது தடுமாறி கீழே விழுந்ததால் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 

இந்நிலையில் சந்தேகத்தின்பேரில் விடுதியில் தங்கியிருந்த 5 இளைஞர்களிடம் தனிப்படை  போலீசார் நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்  கிடைத்து  உள்ளது. 
அதில், மாற்றிக்கொள்ள தேவையான உடை கூட இல்லை .. ஆனால் சந்தேகப்படும்படியாக புதிய 6 பைகள் வைத்து உள்ளனர்.. லலிதா ஜுவல்லரி கொள்ளையின் போது பயன்படுத்திய சிகப்பு நிற பைகள் போன்றே அவர்களும் வைத்து இருந்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து, சில மணி நேரத்திற்கு முன்பாக நகை அடகு வைக்கப்பட்டதற்கான ரசீதும் கையில் வைத்துள்ளனர். எனவே மேலும் இது சந்தேகத்தை வலுப்படுத்தி உள்ளது.

இவர்களிடம் மேலும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதால்,பல தகவல்கள் வெளிவரும்  என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில் லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் இவர்கள் தானா? என்பதை சந்தகேத்தின் பேரிலேயே  விசாரணை  நடத்தி  வருகின்றனர் தவிர, இதுவரை  உறுதிப்படுத்தப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.