Asianet News TamilAsianet News Tamil

ஆந்திரா போலீசாரை அலறவிடும் ஜட்டி கேங்; கொள்ளையர்களின் வீடியோவை வெளியிட்டு எச்சரிக்கை

ஆந்திரா மாநிலம் திருப்பதியில் இரவு நேரங்களில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் சுற்றித் திரியும் ஜட்டி கேங் கொள்ளையர்கள் தொடர்பான வீடியோவை வெளியிட்டு காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆந்திரா மாநிலம் திருப்பதியில் அடுக்குமாடி குடியிருப்புகள், தனியாக அமைந்துள்ள வீடுகளை குறி வைக்கும் மர்ம நபர்கள் இரவு நேரங்களில் ஆள் நடமாட்டம் இல்லாததை உறுதி செய்து கொண்டு ஜட்டி அணிந்த படி வந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். இவர்கள் மிகவும் மூர்க்கமானவர்கள் என்பதால் கொலை செய்யவும் தயங்க மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இது தொடர்பாக காவல் துறையினர் இவர்களது வீடியோகளை வெளியிட்டு பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு எச்சரித்துள்ளனர். தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. 

Video Top Stories