மணி கேட்டது ஒரு குத்தமா? பள்ளி மாணவனின் மண்டையை உடைத்த கல்லூரி மாணவன் - விழுப்புரத்தில் பரபரப்பு

விழுப்புரம் பேருந்து நிலையத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஒருவரை ஒருவர் கொடூரமாக தாக்கிக் கொண்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

First Published Jan 25, 2024, 1:58 PM IST | Last Updated Jan 25, 2024, 2:58 PM IST

விழுப்புரம் தாமரைகுளம் பகுதியைச் சேர்ந்தவர் கல்லூரி மாணவர் சதீஷ். இவர் பழைய பேருந்து பழைய பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது, விழுப்புரம் அடுத்த நன்னாடு கிராமத்தைச் சேர்ந்த விழுப்புரம் காமராஜர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர் கல்லூரி மாணவர் சதீஷிடம் நேரம் கேட்டுள்ளார். அப்போது மது போதையில் இருந்த கல்லூரி மாணவர் சதீஷ் பள்ளி மாணவரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு சண்டையாக மாறியுள்ளது. அப்போது கல்லூரி மாணவர் சதீஷ் இரும்பு கம்பியால் பள்ளி மாணவரின் தலையில் தாக்கியுள்ளார். 

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த பள்ளி மாணவர் தன்னுடைய அண்னனை அழைத்து வந்து கல்லூரி மாணவர் சதீஷை கடுமையாக தாக்கியுள்ளனர். காவலர்கள் தடுத்தும் கேட்காமல், காவலர்கள் முன்பாகவே கடுமையாக சதீஷ்சை தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. பள்ளி மாணவர், கல்லூரி மாணவர் தாக்கும் வீடியோவும், பள்ளி மாணவரின் அண்ணன் கல்லூரி மாணவர் சதீஷை தாக்கும் வீடியோவும் சமூக வளைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

கல்லூரி மாணவர் சதீஷ் தாக்கியதில் தலையில் பலத்த காயமடைந்த பள்ளி மாணவர் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக விழுப்புரம் மேற்கு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது  கஞ்சா மற்றும் மது போதையில் மாணவர்கள் தாக்கிக் கொள்ளும் காட்சி சமூக வலைதளங்ளில் வேகமாக பரவி வருகிறது.

Video Top Stories