கடத்தப்பட்ட குழந்தையை 24 மணிநேரத்தில் மீட்டு அதிரடி காட்டிய காவல்துறை
திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் சாலையோரம் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுவன் கடத்தப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்ட 24 மணி நேரத்தில் சிறுவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த காவல் துறைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
திருச்சி ஸ்ரீரங்கம் மீன் மார்க்கெட் அருகே சாலையோரம் வசித்து வருபவர் முருகன். இவரது மகனான ராகவன் என்ற 3 வயது சிறுவன் நேற்று கடத்தப்பட்டான். இது தொடர்பாக ஸ்ரீரங்கம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி மேற்கொண்டனர். இந்நிலையில் 24 மணி நேரத்தில் சமயபுரம் பகுதியில் அக்குழந்தை தனியாக நின்று கொண்டிருப்பதை காவல் துறையினர் கண்டுபிடித்தனர்.
இதனைத் தொடர்ந்து ராகவனை மீட்ட காவல் துறையினர் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். சிறுவனை கடத்திச் சென்ற பெண்ணின் உருவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. கடத்தலில் ஈடுபட்ட பெண்ணை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.