Watch : 100, 200 கொடுத்து..., இறுதியில் 26 லட்சம் அபேஸ்! ஷாக்கான மருத்துவர்! - ஆன்லைன் மோசடி நபர்களுக்கு வலை!
புதுவையில், ஆன்லைன் மோசடியில் சிக்கி மருத்துவர் ஒருவர் 26.30 லட்சம் ரூபாய் பணத்தை இழந்துள்ளார். மருத்துவரின் பேரில் ஆன்லைன் மோசடி கும்பல் குறித்து சைபர் கிரைம் போலீசர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கர்நாடகா மாநிலம், உடுப்பி மாவட்டம் சிரியாரா கிராமத்தைச் சேர்ந்தவர் மருத்துவர் வேதபிரகாஷ். புதுச்சேரியில் தங்கி, ஜிப்மரில் முதுநிலை மருத்துவம் (எம்.டி.) படித்து வருகிறார். கடந்த மார்ச் மாதம் இவரது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அடையாளம் தெரியாத நபரிடம் இருந்து ஒரு குறுந்தகவல் வந்தது.
அதில், ஆன்லைனின் பகுதி நேர வேலை உள்ளது. அதன் மூலம் அதிகம் சம்பாதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. நாங்கள் அனுப்பும் யூடியூப் சேனல்களை லைக் செய்தால் மட்டும் போதும் ஒரு லைக்கிற்கு ரூ.150 தருகிறோம் என தெரிவித்துள்ளனர்.
இதை நம்பிய வேதபிரகாஷ், மர்ம நபர் அனுப்பிய யூடியூப் சேனலை லைக் செய்து ஸ்கிரின்ஷாட் எடுத்து அனுப்பினார். அதற்காக ரூ.150 அவரது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
பின்னர், Web site க்குள் நுழைய 2000 ரூபாய் கட்டி இணைந்து டாஸ்க் முடித்தால், கூடுதல் பணம் கிடைக்கும் என தெரிவித்துள்ளனர். அதை நம்பி முதற்கட்டமாக ரூ. 1000 செலுத்தி டாஸ்க் பெற்றுள்ளார். அதை முடித்தவுடன் பிட்காயின் வேலட்டில் ரூ. 1300 வந்துள்ளது.
அந்த பணத்தை தனது வங்கி கணக்கிற்கு மாற்றியுள்ளார் வேதபிரகாஷ். இதைத் தொடர்ந்து, குழு டாஸ்க் என கூறி ரூ. 3000 பணத்தை மீண்டும் மீண்டும் செலுத்தி அதன் மூலம் கிடைக்கும் பணத்தை பிட்காயின் ஆன்லைன் வேலாட்டில் வரவு வைக்கப்பட்டு இருந்தது.
கடைசியாக பல்வேறு வங்கி கணக்குகளில் ரூ. 26.30 லட்சம் பணத்தை செலுத்தியதாக கூறப்படுகறிது. ஆன்லைனின் கொடுத்த டாஸ்க் முடித்ததும், தேவபிரசாத் ஆன்லைன் பிட்காயின் வேலட்டில் ரூ. 36.34 லட்சம் பணம் இருந்தது. அந்த பணத்தை தனது வங்கி கணக்கிற்கு மாற்ற முயற்சித்தார். ஆனால், கூடுதலாக பணம் முதலீடு செய்தால் தான் பணம் எடுக்க முடியும் என தெரிவித்துள்ளனர்.
பல முறை முயற்சித்தும் தனது ஆன்லைன் பிட்காயின் இணையதள வேலட்டில் உள்ள பணத்தை எடுக்க முடியாமல் முடக்கினர். தொடர்ந்து, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த டாக்டர் வேதபிரகாஷ் புதுச்சேரி சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், மர்ம நபர் மீது மோசடி வழக்கு பதிவு செய்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.