ஒரு வாழ்கை, ஒரு பயணம்; பீச்சில் என்ஜாய் பண்ணும் சூர்யா - கலக்கும் கங்குவாவின் இரண்டாம் சிங்கிள்!

Kanguva Second Single : பிரபல நடிகர் சூர்யாவின் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள கங்குவா திரைப்படத்திலிருந்து இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாகி உள்ளது.

Share this Video

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்து வரும் சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் தான் கங்குவா. இதுவரை தமிழ் மொழியில் யாரும் எடுக்காத ஒரு புதிய திரை கதையை கையாண்டு இருக்கிறார் இப்படத்தின் இயக்குனர் சிறுத்தை சிவா. பிரபல ஸ்டுடியோ கிறீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா இந்த திரைப்படத்தை தயாரித்திருக்கும் நிலையில் வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி உலக அளவில் சுமார் 38 மொழிகளில் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. 

ஏற்கனவே இந்த திரைப்படத்தில் இருந்து முதல் சிங்கிள் பாடல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இளமை ததும்பும் இரண்டாவது சிங்கிள் பாடல் இன்று வெளியாகி உள்ளது. பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் இந்த திரைப்படத்தின் பின்னணி செய்யும் ரிலீசுக்கு முன்பாகவே மிகப்பெரிய பாராட்டுகளை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Video