Asianet News TamilAsianet News Tamil

போற உசுரு அவனுங்க கிட்ட போராடியே போகட்டும்.! கலங்க வைக்கும் யோகி பாபுவின் 'பொம்மை நாயகி' ட்ரைலர்!

நடிகர் யோகி பாபு நடித்துள்ள 'மண்டேலா' படத்திற்கு பின்னர் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'பொம்மை நாயகி' படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.

First Published Jan 25, 2023, 7:14 PM IST | Last Updated Jan 25, 2023, 7:14 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருக்கும் யோகி பாபு, காமெடியை தாண்டி சில படங்களில் கதையின் நாயகியாக நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடிக்கும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

ஏற்கனவே இவர் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான 'மண்டேலா' திரைப்படம் விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று பாராட்டுகளையும், விருதுகளையும் குவித்த நிலையில், 'பொம்மை நாயகி' படத்திலும் தன்னுடைய வெற்றியை யோகி பாபு உறுதி செய்வார் என்பது தற்போது வெளியாகியுள்ள ட்ரைலரை பார்த்தாலே தெரிகிறது.

தன்னுடைய மகளுக்காக உயிரைக் கொடுத்து போராடும் ஒரு தந்தையாக நடித்து பார்ப்பவர்கள் நெஞ்சை கலங்கச் செய்துள்ளார். இந்த திரைப்படம் பிப்ரவரி 3ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த படத்தை பிரபல இயக்குனர் பா ரஞ்சித் தன்னுடைய நீலம் புரொடக்ஷன் மூலம் தயாரித்துள்ளார். இயக்குனர் ஷான் இப்படத்தை இயக்கியுள்ளார். மேலும் சுந்தரமூர்த்தி இசையமைப்பில், அதிசயராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார், மிகவும் எதார்த்தமான கதாபாத்திரங்களோடு உருவாக்கியுள்ள இப்படம் யோகி பாபுவின் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியுள்ளது.

Video Top Stories