கோலிவுட்டில் மீண்டும் ஒரு Fantasy Adventure படம்.. யோகி பாபு & வேதிகா இணையும் "கஜானா" - மிரட்டும் டீசர் இதோ!

Gajaana Teaser : பிரபல நடிகர் யோகி பாபு மற்றும் பிரபல நடிகை வேதிகா நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் தான் கஜானா. அப்படத்தின் டீசர் இப்பொது வெளியாகியுள்ளது.

Share this Video

தமிழ் சினிமாவில் கடந்த சில காலமாகவே பேண்டஸி அட்வென்ச்சர் கதை அம்சம் கொண்ட பல திரைப்படங்கள் தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றது. இந்நிலையில் போர் ஸ்கொயர் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் பிரபல நடிகர் யோகி பாபு, பிரபல நடிகை வேதிகா மற்றும் சென்றாயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் புதிதாக உருவாகியுள்ள திரைப்படம் தான் கஜானா. 

இயக்குனர் பிரகதீஷ் சாம்ஸ் இயக்கத்தில் அச்சு ராஜாமணி இசையில் கேஎம் ரியாஸ் படத்தொகுப்பில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. ஒரு காட்டுக்குள் பயணம் செய்யும் ஒரு குழு எதிர்கொள்ளும் அமானுஷ்யங்களின் தொகுப்பாக இந்த திரைப்படம் அமைந்திருக்கிறது. படத்தில் பிரபல நடிகர் மொட்டை ராஜேந்திரன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாண்டு வெளியாகவுள்ள இந்த திரைப்படத்தின் டீசர் தற்பொழுது வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

Related Video