என்னது... மேல லாரி ஏத்திட்டு சாரியா? யோகி பாபுவின் காமெடி கலாட்டாவுடன் வெளியான 'லக்கி மேன்' ட்ரைலர்!

நடிகர் யோகி பாபு ஹீரோவாக நடித்துள்ள, லக்கி மேன் படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
 

Share this Video

காமெடி நடிகர் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் லக்கி மேன். இப்படத்தை பாலாஜி வேணுகோபால் என்பவர் இயக்கி உள்ளார். ஆர்.ஜே.வாக பணியாற்றி வந்த இவர், நடிகராகவும் பல்வேறு படங்களில் நடித்துள்ள நிலையில், இப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார். அதிர்ஷ்டத்தை தேடி அலையும் மனிதனின் கதையை மையமாக வைத்து இப்படத்தை எடுக்கப்பட்டுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

லக்கி மேன் படத்தை தின்க் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். சந்தீப் கே விஜய் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தில் யோகிபாபு உடன் வீரா, ரெபெக்கா, ஆர்.எஸ்.சிவாஜி உள்பட ஏராளமானோர் நடித்துள்ளனர். இப்படத்தின் ட்ரைலரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ள நிலையில் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Video