Asianet News TamilAsianet News Tamil

விமல் ஆக்ஷனில் பொறி பறக்கவிடும்... 'துடிக்கும் கரங்கள்' படத்தை ட்ரைலர் வெளியானது!

 நடிகர் விமல் நடித்துள்ள 'துடிக்கும் கரங்கள்' படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
 

First Published Aug 23, 2023, 8:13 PM IST | Last Updated Aug 23, 2023, 8:13 PM IST

இயக்குனர் வேலுதாஸ் இயக்கத்தில், நடிகர் விமல் நடித்துள்ள ஆக்சன் திரைப்படமான 'துடிக்கும் கரங்கள்'  சஸ்பென்ஸ், காதல், காமெடி என அனைத்தும் கலந்த ஜனரஞ்சக படமாக உருவாக்கியுள்ளது. இந்த படத்தை கே அண்ணாதுரை தயாரித்துள்ளார்.

ராமி ஒளிப்பதிவில், லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பு செய்துள்ள இந்த படத்திற்கு, ராகவ் பிரசாத் இசையமைத்துள்ளார். விமலுக்கு ஜோடியாக மிஸ்ரா நரங் நடித்துள்ளார். மேலும் சதீஷ், சௌந்தரபாண்டியன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தற்போது  பட குழு இந்த படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளது.
 

Video Top Stories