விக்ரம் நடித்துள்ள 'வீர தீர சூரன்' பார்ட் 2 படத்தில் இருந்து வெளியான கல்லூரும் லிரிக்கல் பாடல் வெளியானது!
நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள 'வீர தீர சூரன் - பார்ட் 2' படத்தில் இருந்து வெளியான கல்லூரும் என்கிற பாடல் வெளியானது.
தங்கலான் படத்தின் ரிலீசுக்கு பின்னர், விக்ரம் நடித்துள்ள 'வீர தீர சூரன் - பார்ட் 2'. படத்தில் இருந்து ரொமான்டிக் பாடலான கல்லூரும் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த படத்தை இயக்குனர் அருண் குமார் இயக்கி உள்ளார். துஷாரா விஜயன் கதாநாயகியாக நடிக்க, எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு , துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஜி.கே. பிரசன்னா கவனிக்க, கலை இயக்கத்தை சி. எஸ். பாலச்சந்தர் மேற்கொண்டிருக்கிறார். ஆக்சன் திரில்லர் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஹெச் ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிக்கிறார்.