Fight-க்கு ரெடியா வாடி... தூள் கிளப்பும் துருவ நட்சத்திரம் படத்தின் செகண்ட் சிங்கிள் - லிரிக்கல் வீடியோ இதோ
கவுதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சீயான் விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் இரண்டாவது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
கவுதம் மேனன் இயக்கத்தில் சீயான் விக்ரம் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் துருவ நட்சத்திரம். நீண்ட நாட்களாக கிடப்பில் கிடந்த இப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ், ரித்து வர்மா, திவ்ய தர்ஷினி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வர உள்ளது. தற்போது இப்படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டு உள்ளது.
அதன்படி துருவ நட்சத்திரம் படத்தின் செகண்ட் சிங்கிளை படக்குழு வெளியிட்டுள்ளது. ஹிஸ் நேம் இஸ் ஜான் என தொடங்கும் இப்பாடலுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து உள்ளார். ஜான் என்கிற கேரக்டரில் நடித்துள்ள சீயான் விக்ரமை அறிமுகப்படுத்தும் விதமாக அமைந்துள்ள இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தூள் கிளப்பும் இப்பாடல் வரிகளை பால் டப்பா அனிஷ் என்பவர் எழுதி பாடி உள்ளார். பெப்பி டிராக் சாங் ஆக இருக்கும் இப்பாடல் கேட்டவுடன் ரசிகர்களை கவரும் வகையில் உள்ளது. இதற்கு முன்னர் இப்படத்தின் இருந்து வெளிவந்த ஒரு மனம் என்கிற பாடலும் வேறலெவலில் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.