ஆக்ஷன் ஹீரோவாக விக்ரம் பிரபு மிரட்டியுள்ள 'GHAATI' திரைப்படத்தின் ஸ்பெஷல் டீசர் வெளியானது!
நடிகர் விக்ரம் பிரபுவின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடிப்பில் உருவாகியுள்ள GHAATI திரைப்படத்தின் சிறப்பு டீஸர் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.
இயக்குனர் க்ரிஷ் ஜகர்லாமுடி இயக்கத்தில், இந்த ஆண்டு ஏப்ரல் 18ஆம் தேதி ரிலீசாக உள்ள திரைப்படம் காட்டி. இந்த படத்தில் அனுஷ்கா ஷெட்டி கதையின் நாயகியாக நடிக்க, விக்ரம் பிரபு அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். அதிரடி ஆக்ஷன் கதைகளத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், தெலுங்கில் உருவானாலும் தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம், உள்ளிட்ட மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. இந்த படத்தின் பணிகள் முடிவடைந்து போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், இன்று நடிகர் விக்ரம் பிரபுவின் பிறந்த நாளை முன்னிட்டு காட்டி படத்தின் சிறப்பு டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.