சைலன்ட் கில்லராக விஜய் சேதுபதி... அதிரடியில் தொம்சம் செய்யும் சந்தீப் கிஷன்! வெளியானது 'மைக்கில்' டீசர்!
நடிகர் விஜய் சேதுபதி, சந்தீப் கிஷனுடன் இணைந்து நடித்துள்ள மைக்கில் படத்தின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த படத்தில் மிகவும் சைலன்ட் கில்லர் போன்று விஜய் சேதுபதி நடித்துள்ளது தெரிகிறது. கிட்டத்தட்ட... விக்ரம் வேதா படத்தில் தோன்றும் கெட்டப்பில் தான் இந்த படத்தில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி. மேலும் அதிரடி நாயகனாக சந்தீப் கிஷன் நடித்துள்ளார். கதாநாயகியாக திவ்யான்ஷா கௌஷிக் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் கெளதம் மேனன் நடித்துள்ளார். வருண் சந்தீஸ், ஐயப்பா ஷர்மா, அனுசுயா, வரலக்ஷ்மி போன்ற பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் போன்ற 5 மொழிகளில் பான் இந்தியா படமாக இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை கரண் C புரொடக்ஷன் LLP & ஸ்ரீ வேங்கடேஸ்வரா சினிமாஸ் LLP நிறுவனம் தயாரித்துள்ளது. சாம் CS இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படம் குறித்த டீசர் தற்போது வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.