Asianet News TamilAsianet News Tamil

Watch : செம்ம மாஸா இருக்கே... வெளியானது வாரிசு படத்தின் டெலிடட் சீன்

வம்சி இயக்கத்தில் விஜய், பிரகாஷ் ராஜ், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளிவந்த வாரிசு படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி தற்போது வெளியிடப்பட்டு உள்ளது.

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த திரைப்படம் வாரிசு. இப்படம் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு ரிலீசாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. தில் ராஜு தயாரித்திருந்த இப்படத்தில் நடிகர் விஜய் உடன் ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பிரபு, சங்கீதா, சம்யுக்தா, ஷியாம், யோகிபாபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.

பொங்கல் விருந்தாக ரிலீஸ் ஆன இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும், பேமிலி ஆடியன்ஸ் கொடுத்த வரவேற்பால் வசூலை வாரிக்குவித்தது. இப்படம் ரூ.310 கோடிக்கு மேல் வசூலித்து நடிகர் விஜய்யின் கெரியரிலேயே அதிக வசூல் சாதனை நிகழ்த்திய படமாகவும் மாறியது.

வாரிசு படத்தில் நிறைய காட்சிகள் நீக்கப்பட்டு இருந்தன. அந்த காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில், நடிகர் விஜய்க்கும், பிரகாஷ் ராஜுக்கு இடையேயான செம்ம மாஸான டெலிடட் சீன் ஒன்றை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. இதைப்பார்த்த ரசிகர்கள் இது படத்துல இருந்திருந்தா தியேட்டர்ல அதிரி புதிரியா இருந்திருக்கும் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Video Top Stories