Asianet News TamilAsianet News Tamil

காதல் மழையில் நனைய வைக்கும் 'நானும் நீயும் ' ..! கும்பாரி பட இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியானது!

நடிகர் விஜய் விஷ்வா ஹீரோவாக நடித்துள்ள, குமாரி படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டாவது பாடலை நடிகர் விமல் வெளியிட்டுள்ளார்.
 

நடிகர் விஜய் விஷ்வா ஹீரோவாக நடித்துள்ள 'கும்பாரி' திரைப்படம் வெளியில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் நளீஃப் என்கிற புதுமுக நாயகி ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் மஹானா சஞ்சீவி , ஜான் விஜய், பருத்தி வீரன் சரவணன், சாம்ஸ், மதுமிதா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

காதல் மற்றும் காமெடி கதைக்களத்தில்... இதுவரை திரையில் சொல்லப்படாத கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த 'கும்பாரி' படத்தை,  கெவின் ஜோசப் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ஜெய் டன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் இருந்து வெளியான முதல் சிங்கிள் பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், இரண்டாவது காதல் பாடலான 'நானும் நீயும்' சிங்கிள் பாடலை நடிகர் விமல் வெளியிட்டுள்ளார். 

Video Top Stories