அங்கிள் என்னபார்க்க வரமாட்டிங்களா! ஏக்கத்தோடு கேட்ட குழந்தை.. உடனே வீடியோ காலில் வந்து சர்ப்ரைஸ் கொடுத்த விஜய்

குட்டி ரசிகை ஒருவர் தன்னை நேரில் பார்க்க வருமாறு அழைப்பு விடுத்ததை அறிந்த விஜய் அவருடன் வீடியோ காலில் பேசி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

First Published Mar 31, 2023, 7:26 PM IST | Last Updated Mar 31, 2023, 7:26 PM IST

நடிகர் விஜய் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. குறிப்பாக குழந்தைகளுக்கு நடிகர் விஜய் படங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அப்படி நடிகர் விஜய்யின் குட்டி ரசிகை ஒருவர் செய்துள்ள சேட்டை தான் இன்றைக்கு சோசியல் மீடியாவில் செம்ம டிரெண்டிங் ஆக இருந்தது.

சென்னை பல்லாவரத்தை சேர்ந்த குழந்தை ஒருவர் நடிகர் விஜய்யை நேரில் பார்க்க வேண்டும் என்றும், அவரை வீட்டுக்கு அழைத்து வரும்படியும் தனது பெற்றோரிடம் அழுது செல்ல சண்டை போட்ட வீடியோ ஒன்று வைரல் ஆனது. அதற்கு அவரது பெற்றோர் அவங்கெல்லாம் நம்ம வீட்டுக்கு வர மாட்டாங்க என்று சொன்னதும் அந்த குழந்தைக்கு கண்ணே கலங்கிவிட்டது.

இந்த வீடியோ வைரலானதை அடுத்து இதனை நடிகர் விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தளபதியின் கவனத்துக்கு இதனை எடுத்துச் சென்றுள்ளார். இதையடுத்து அந்த குழந்தையுடன் பேசியே ஆகவேண்டும் என ஆசைப்பட்ட விஜய், தற்போது லியோ படத்தின் ஷூட்டிங்கில் பிசியாக இருப்பதனால் நேரில் சென்று பார்க்க முடியாவிட்டாலும், வீடியோ கால் மூலம் பேசி அந்த குழந்தைக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

விஜய்யின் இந்த அழைப்பை எதிர்பார்க்காத அந்த குழந்தையும், அவரது பெற்றோர்களும் உற்சாகத்தில் திளைத்துப் போயினர். நடிகர் விஜய் அந்த குழந்தையுடன் பேசும் வீடியோ காட்சிகளும் வெளியாகி உள்ளன. இறுதியாக ஒருநாள் அந்த குழந்தையை அழைத்துக்கொண்டு வருமாறு விஜய் அவரது பெற்றோர்களிடம் கேட்டுக்கொண்டார். 

Video Top Stories