Asianet News TamilAsianet News Tamil

மரண மாஸ்... தளபதியின் பட்டையை கிளப்பும் டான்ஸ்! ராஷ்மிகாவின் கிளுகிப்பான கவர்ச்சியோடு வெளியான ரஞ்சிதமே பாடல்!

'வாரிசு' படத்தில் நடிகர் விஜய் பாடியுள்ள, ரஞ்சிதமே பாடல்.. வெளியாகி சமூக வலைத்தளத்தில் பட்டையை கிளப்பி வருகிறது.
 

First Published Nov 5, 2022, 6:01 PM IST | Last Updated Nov 5, 2022, 6:03 PM IST

இயக்குனர் வம்சி இயக்கத்தில்,  தளபதி விஜய் நடித்துள்ள 'வாரிசு' திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின், ப்ரோஸ்ட் புரோடக்ஷன் மற்றும் ப்ரோமோஷன் பணிகள் படு தீவிரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் இன்று நடிகர் விஜய், தமன் இசையில் பாடி... வெறித்தனமாக டான்ஸ் ஆடியுள்ள ரஞ்சிதமே பாடல் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சற்று முன்னர் இந்த பாடல் வெளியாகி உள்ளது.

தமன் இசைக்க ஏற்றவாறு விஜய் தன்னுடைய நடன அசைவுகளாலும், இனிமையான குரலாலும் ரசிகர்களை ஈர்த்துள்ளார். நடிகை ரஷ்மிகா தலைநிறைய மல்லி பூ வைத்து, கவர்ச்சியில் கிளுகிளுப்பாக  ஆட்டம் போட்டுள்ள இந்த பாடல், வெளியான சில நிமிடங்களிலேயே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று லைக்குகளை குவித்து வருகிறது. இந்த பாடலுக்கு விவேக் லிரிக்ஸ் எழுதியுள்ளார். மேலும் விஜயுடன் சேர்ந்து இந்த பாடலை எம் எம் மானஸ்வி பாடியுள்ளார்.

Video Top Stories