விஜய் சேதுபதியின் மவுன படத்தில் இணைந்த ஏ.ஆர்.ரகுமான்... வெளியானது காந்தி டாக்ஸ் டீசர்
கிஷோர் பாண்டுரங் பெலேக்கர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடித்து வரும் காந்தி டாக்ஸ் என்கிற மவுன படத்தின் அறிவிப்பு டீசர் வெளியாகி உள்ளது.
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் மவுன படம் ‘காந்தி டாக்ஸ்’. காந்தி ஜெயந்தி தினமான இன்று, அப்படத்தின் அறிவிப்பு வீடியோ டீசர் வெளியிடப்பட்டு உள்ளது. அதில் இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் நடிகை அதிதி ராவ் மற்றும் நடிகர் அரவிந்த் சாமி ஆகியோர் நடிக்க உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
இப்படத்தை கிஷோர் பாண்டுரங் பெலேக்கர் இயக்குகிறார். இப்படத்தை ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளதாகவும் அறிவித்துள்ளனர். இப்படம் அடுத்தாண்டு ரிலீசாகும் என்றும் அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.