
போல்டு கண்ணனாக விஜய் சேதுபதி; தூள் கிளப்பும் Ace படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஸ்டைலிஷ் ஹீரோவாக நடித்துள்ள Ace திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டு உள்ளது.
ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்தின் இயக்குனர் ஆறுமுகக்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் Ace. இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது. அதில் ஸ்டைலிஷ் லுக்கில் காட்சியளிக்கும் விஜய் சேதுபதி, இப்படத்தில் போல்டு கண்ணன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். முழுக்க முழுக்க ஆக்ஷன் கலந்த கமர்ஷியல் படமாக உருவாகி உள்ள இப்படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.
Ace திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ருக்மிணி வஸந்த் நடித்துள்ளார். கன்னட நடிகையான இவர் தமிழில் நடித்துள்ள முதல் படம் இதுவாகும். மேலும் யோகி பாபு, பப்லு பிருத்விராஜ், திவ்யா பிள்ளை ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்து உள்ளார். கோவிந்தராஜ் இப்படத்தின் படத்தொகுப்பாளராக பணியாற்றி இருக்கிறார்.