Phoenix : ஹீரோவான சூர்யா விஜய் சேதுபதி.. பிள்ளையார் சுழி போட்ட சிவகார்த்திகேயன் - வெளியானது "Phoenix" டீசர்!

Phoenix Teaser : பிரபல நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் தான் Phoenix. அந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

Share this Video

பிரபல நடிகர் விஜய் சேதுபதி அவர்களுடைய மகன் சூர்யா விஜய் சேதுபதி நடிக்கும் "பீனிக்ஸ்" திரைப்படத்தின் டீசர் தற்பொழுது வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தை பிரபல ஸ்டண்ட் இயக்குனர் அனல் அரசு இயக்கியுள்ளார். இது திரைப்பட இயக்குனராக அவருக்கு முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல நடிகை வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ள நிலையில், பல முன்னணி நடிகர், நடிகைகள் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர். கிக் பாக்ஸின் கனவோடு பயணிக்கும் ஒரு இளைஞனின் வாழ்க்கையில் ஏற்படும் அதிரடியான மாற்றங்கள் குறித்த கதையாக இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. 

ஏற்கனவே ஒரு செய்தியாளர் சந்திப்பில் பேசிய சூர்யா விஜய் சேதுபதி, தந்தையின் நிழலில் வளர விரும்பவில்லை என்றும், தனியாக நின்று தன்னால் முடிந்ததை சாதிக்க விரும்புவதாகவும் கூறியிருந்தார். அண்ட் வகையில் இன்று வெளியான இந்த பட டீசரை கூட மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிடாத நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் இப்படத்தின் டீசரை வெளியிட்டு படக் குழுவினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார்.

Related Video