Asianet News TamilAsianet News Tamil

விஜய் சேதுபதியின் ‘டிஎஸ்பி’ படம் மூலம் கம்பேக் கொடுத்த பாடகர் உதித் நாராயணன் - வைரலாகும் ‘நல்லா இருமா’ பாடல்

பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள டிஎஸ்பி படத்தில் இடம்பெறும் நல்லா இருமா பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது.

First Published Nov 17, 2022, 8:52 AM IST | Last Updated Nov 17, 2022, 8:52 AM IST

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் பொன்ராம் தற்போது இயக்கியுள்ள படம் தான் டிஎஸ்பி. நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அனுகீர்த்தி என்கிற புதுமுக நடிகை நடித்துள்ளார். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரித்துள்ளார்.

மேலும் இப்படத்தில் குக் வித் கோமாளி புகழ், நடிகை ஷிவானி, ஷாந்தினி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்திற்கு டி இமான் இசையமைத்து உள்ளார். இப்படம் வருகிற டிசம்பர் மாதம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

இப்படத்தின் முதல் பாடல் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. நல்லா இருமா என தொடங்கும் அப்பாடலை பிரபல பின்னணி பாடகர் உதித் நாராயணன் பாடி இருக்கிறார். அவருடன் சூப்பர் சிங்கர் பிரபலங்களான செந்தில் மற்றும் மாளவிகா சுந்தர் ஆகியோரும் இணைந்து பாடி இருக்கின்றனர். திருமணமாகும் பெண்ணை வாழ்த்தி அவரின் முன்னாள் காதலன் பாடும்படியான இப்பாடல் இனி பெரும்பாலான லவ் பெயிலியர் ஆன பசங்களின் ரிங்டோனாக இருக்கும் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.

Video Top Stories