அடித்து நொறுக்கும் ஆக்ஷன்... சரத்குமார் நடித்துள்ள 'ஹிட்லிஸ்ட்' படத்தின் டீசரை வெளியிட்ட விஜய் சேதுபதி!

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, ஆக்சன் திரைப்படமான “ஹிட்லிஸ்ட்” படத்தின் டீசரை வெளியிட்டார். 
 

First Published Aug 18, 2023, 8:50 PM IST | Last Updated Aug 18, 2023, 8:50 PM IST

இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் தயாரிப்பு நிறுவனமான ஆர்.கே செல்லுலாய்ட்ஸ்-ன் அடுத்த படைப்பாக உருவாகியுள்ளது  “ஹிட்லிஸ்ட்”. சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, பிரபல இயக்குனர் விக்ரமன் மகன் விஜய் கனிஷ்கா அறிமுகமாகும் இப்படத்தின் படபிடிப்பு சமீபத்தில் முடிந்தது. இயக்குனர்கே.எஸ்.ரவிகுமாரின் அசோசியேட் இயக்குநர்கள் சூர்யகதிர் மற்றும் கார்த்திகேயன் இணைந்து இப்படத்தை இயக்கி உள்ளனர்.

இத்திரைப்படத்தில் கௌதம்வாசுதேவ்மேனன், சமுத்திரகனி, முனிஷ்காந்த், சித்தாரா, ஸ்ம்ருதிவெங்கட், ஐஸ்வர்யாதத்தா, பாலசரவணன், ரெட்டின் கிங்ஸ்லி, அபிநக்‌ஷத்ரா, KGF புகழ் கருடா ராமசந்திரா மற்றும் அனுபமாகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். C.சத்யா இசையமைக்கிறார், ராம்சரண் ஒளிப்பதிவு செய்ய, ஜான் ஆப்ரகாம் படத்தொகுப்பு செய்கிறார். மற்றும் கலை இயக்கம் அருண்.

இந்நிலையில் இன்று மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, டீசரை பார்த்துவிட்டு “சிறந்த ஆக்ஷன் படம்”  என்று மகிழ்ந்து பாராட்டியாடுதோ மட்டும் இன்றி இந்த டீசரையும் வெளியிட்டுள்ளார். தயாரிப்பாளர் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமாரும், ஹிட்லிஸ்ட் படக்குழுவினருக்கும் தன் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், விரைவில் ரிலீஸ் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Video Top Stories