Bigg Boss Tamil Season 8 : மக்கள் செல்வன் வழிநடத்தும் பிக் பாஸ் சீசன் 8 - வெளியான போட்டியாளர்களின் பட்டியல்!

Bigg Boss Tamil Season 8 : நாளை மறுநாள் ஞாயிற்று கிழமை (அக்டோபர் 6) முதல் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் கோலாகலமாக துவங்கவுள்ளது.

Ansgar R  | Published: Oct 4, 2024, 9:52 PM IST

தமிழக சின்னத்திரை வரலாற்றில் ரசிகர்களால் மிகப்பெரிய அளவில் விரும்பப்பட்ட நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக் பாஸ். கடந்த ஏழு ஆண்டுகளாக, 7 சீசங்களாக பல தரப்பு மக்களையும் கவர்ந்து வந்த அந்த நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் தற்பொழுது துவங்க உள்ளது. ஆனால் "ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு" என்று சொல்லும் வகையில், இதுவரை உலக நாயகன் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நிலையில், இனி மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவிருக்கிறார். 

நாளை மறுநாள் அக்டோபர் மாதம் 6ம் தேதி முதல் பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்க உள்ள நிலையில், தற்போது இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள பிரபலங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.

Read More...

Video Top Stories