Asianet News TamilAsianet News Tamil

Bigg Boss Season 8 : விஜய் சேதுபதி மாஸாக அசத்திய பிக் பாஸ் ப்ரோமோ.. உருவானது எப்படி? வெளியான டக்கர் வீடியோ!

Bigg Boss Season 8 : விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியின் புரோமோ உருவான விதம் குறித்த வீடியோ ஒன்று தற்பொழுது வெளியாகி வைரலாகி வருகிறது.

First Published Oct 1, 2024, 11:08 PM IST | Last Updated Oct 4, 2024, 3:18 PM IST

கடந்த ஏழு சீசங்களாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சி விரைவில் தனது எட்டாவது சீசனில் அடியெடுத்து வைக்க உள்ளது. இதுவரை இந்த நிகழ்ச்சியை ஏழு சீசன்களாக உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில், இந்த முறை "ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு" என்கின்ற வகையில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளார். 

வருகின்ற ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் மாதம் 6ம் தேதி மாலை இந்த நிகழ்ச்சி துவங்க உள்ளது. இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சியின் ப்ரோமோ எப்படி உருவானது? என்பது குறித்த வீடியோ ஒன்று தற்பொழுது வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

Video Top Stories