உலக பட்டினி தினத்தினை முன்னிட்டு ஏழை, எளிய மக்களின் பசியாற்ற இலவசமாக மதிய உணவு வழங்கிய விஜய் ரசிகர்கள்

விராலிமலை விஜய் ரசிகர் மன்றம் சார்பில் ஏழை, எளிய, ஆதரவற்றவர்களுக்கு மதிய உணவு விராலிமலையில் வழங்கப்பட்டது.

First Published May 28, 2023, 2:40 PM IST | Last Updated May 28, 2023, 2:41 PM IST

உலகளவில் நீண்டகால பட்டினியால் வாடும் மக்கள் குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் மே 28ஆம் தேதி அன்று உலக பட்டினி தினம் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது. 

உலக பட்டினி தினத்தினை முன்னிட்டு ஏழைகளின் பசியைப் போக்கிடும் வகையில் விழிப்புணர்வுக்காக, விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தளபதி ஒரு நாள் மதிய உணவு சேவையகம் என்ற திட்டம் மூலமாக ஏழை, எளிய மக்களுக்காக உணவு வழங்குமாறு நடிகர் விஜய் தனது ரசிகர்களுக்கு உத்தரவிட்டிருந்தார்.

அந்த வகையில் விராலிமலை விஜய் ரசிகர் மன்ற ஒன்றிய தலைவர் பழனி தலைமையில் ரசிகர்கள் 100க்கும் மேற்பட்ட ஏழை, எளிய, ஆதரவற்றவர்களை தேடிச்சென்று மதிய உணவு வழங்கினர்

Video Top Stories