சூர்யாவின் குரலில் வெளியானது விஜய் தேவரகொண்டாவின் 'கிங்டம்' படத்தின் டீசர் டீசர்!

நடிகர் விஜய் தேவரகொண்டாவின் 12-ஆவது திரைப்படமாக உருவாகியுள்ள 'கிங்டம்' படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

manimegalai a  | Published: Feb 12, 2025, 5:09 PM IST

இயக்குனர் கௌதம் திண்ணனுரி இயக்கியுள்ள நிலையில் இந்த படத்தை நாகா வம்சி மற்றும் சாய் சௌஜன்யா ஆகியோர் தயாரித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில்,  விஜய் தேவரகொண்டா ஒரு போர் வீரன் போல் நடித்துள்ளார். இந்த படத்திற்காக விஜய் தேவரகொண்டா போட்ட உழைப்பை இந்த படத்தின் டீசரை பார்க்கும் போதே தெரிகிறது.

பீரியாடிக் திரைப்படமாக மக்களை காப்பாற்ற போராடும் ஒருவரை பற்றிய படம் தான் இது என்பது தெரிகிறது. தமிழில் இந்த படத்தின் டீசருக்கு நடிகர் சூர்யா குரல் கொடுத்துள்ளார். இந்த டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இந்த படம் உலகம் முழுவதும், மே 30-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

Video Top Stories