Valli Mayil Teaser: பெண் பத்திரிகையாளர்கள் ஒன்று கூடி வெளியிட்ட விஜய் ஆண்டனியின் 'வள்ளி மயில்' டீசர்!

விஜய் ஆண்டனி இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் நடித்துள்ள 'வள்ளி மயில்' படத்தின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
 

Share this Video

விஜய் ஆண்டனி கடைசியாக அக்டோபர் 6, 2023 அன்று வெளியான 'ரத்தம்' படத்தில் நடித்தார். இதை தொடர்ந்து இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'வள்ளி மயில்' திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஃபரியா அப்துல்லா நடித்துள்ளார்.

மேலும் முக்கிய கதாபாத்திரத்தில், பாரதிராஜா, சத்யராஜ், ஃபரியா அப்துல்லா, ரெடின் கிங்ஸ்லி, ஜி.பி.முத்து, அரந்தாங்கி நிஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தற்போது இந்த படத்தின் டீசரை... பெண் பத்திரிகையாளராகள் ஒன்று கூடி வெளியிட்டுள்ளனர்.


திண்டுக்கல், கோபிசெட்டிபாளையம், பொள்ளாச்சி, கொடைக்கானல், தேனி, காரைக்குடி மற்றும் பழனி ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ள இப்படம் ஆக்ஷன் எண்டெர்டைனராக உருவாகியுள்ளது. இந்த படத்தை நல்லு சாமி பிச்சர்ஸ் என்கிற நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Video