இப்போதில் இருந்து உங்க கவுண்ட் டவுன் ஸ்டார்ட் ஆகுது! விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான தமிழரசன் டிரைலர்!
நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி உள்ள 'தமிழரசன்' படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
விஜய் ஆண்டனி நடித்துள்ள தமிழரசன் திரைப்படம், ஆக்சன் மற்றும் குடும்ப செண்டிமெண்ட் கலந்த படமாக எடுக்கப்பட்டுள்ளது. மேலும் எதிர்பார்க்காத திருப்பங்களுடன் இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த படத்தை இயக்குனர் பாபு யோகிஸ்வரன் இயக்கி உள்ளார். இந்த படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ள நிலையில், இந்த மாதம் ரிலீசாக உள்ளது. இந்த படத்தில் விஜய் ஆண்டோனிக்கு ஜோடியாக நடிகை ராமயா நம்பீசன் நடித்துள்ளார். மேலும் மலையாள நடிகர் சுரேஷ் கோபி, பாலிவுட் நடிகர் சோனு சூட், யோகி பாபு, சங்கீதா க்ரிஷ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
இசைஞானி இளையராஜா, இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார், இந்த படத்தில் சுமார் பத்து வருடங்களுக்குப் பின்னர் கே ஜே யேசுதாஸ் இளையராஜாவின் இசையில் பாடியுள்ளார் என்பதை குறிப்பிடத்தக்கது. SNS ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் கௌசல்யா ராணி என்பவர் இந்த படத்தை தயாரித்துள்ளார். ஆதிசேகர் படத்தொகுப்பு செய்துள்ள இந்த படத்திற்கு. அனல் அரசு சண்டை பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார். மிகப்பெரிய எதிர்பார்ப்பு மத்தியில் உருவாக்கிய இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.