Asianet News TamilAsianet News Tamil

ஒரு லட்சம் கோடிக்கு சொந்தக்காரன்..! தங்கைக்கான போராட்டம் தான் பிச்சைக்காரன் 2 படமா? வெளியானது ட்ரைலர்!

நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள, நடித்துள்ள 'பிச்சைக்காரன் 2' படத்தின் ட்ரைலர் தற்போது வெளியானது.
 

நடிகர் விஜய் ஆண்டனி, நடிப்பில்  கடந்த 2016 ஆம் ஆண்டு... இயக்குனர் சசி இயக்கத்தில் நடித்து வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டடித்த திரைப்படம் 'பிச்சைக்காரன் 2'. இப்படம் வெளியாகி 7 ஆண்டுகள் ஆகும் நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை, நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியே இயக்கி, தயாரித்து, ஹீரோவாகவும் நடித்துள்ளார்.

பிளாக் பஸ்டர் ஹிட்டடித்த ஒரு படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளதால்... இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளது. இந்நிலையில் சற்று முன்னர் 'பிச்சைக்காரன் 2' படத்தின், ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தின் விஜய் ஆன்டனி விஜய் குருமூர்த்தி என்கிற கதாபாத்திரத்தில் நடித்தார். மேலும் வர 1 லட்சம் கோடிக்கு அதிபதி என்றும், உலக பணக்காரர்களில் 7 ஆவது பணக்காரர் வேடத்தில் நடிப்பதும் ட்ரைலர் மூலம் தெரிகிறது.

பின்னர் இவர் கொலை செய்யப்படுவதாகவும், இவரை கொலை செய்தவர் சத்யா என்கிற இன்னொரு விஜய் ஆண்டனி என ட்ரைலரில் காட்டப்பட்டுள்ளதால்... விஜய் ஆண்டனி இரட்டை வேடத்தில் நடித்துள்ளாரா? அல்லது... கதையில் வேறு ஏதாவது ட்விட்ஸ்ட் இருக்குமா? என எதிர்பார்க்கப்படுகிறது. சற்று முன்னர் வெளியான இந்த ட்ரைலர் மிகவும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது. கடந்த வாரமே இப்படம் வெளியாக வேண்டிய நிலையில், நீதிமன்றத்தில் இப்படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டது. எனவே தனக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டதாகவும் தெரிவித்திருந்தார் விஜய் ஆண்டனி. இதை தொடர்ந்து இப்படம், மே 19 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Video Top Stories