'பிச்சைக்காரன் 2' படத்தில் இருந்து கல்லூரும் பூவே... ரொமான்டிக் வீடியோ பாடல் வெளியானது!

நடிகர் விஜய் ஆன்டனி நடிப்பில் உருவாகியுள்ள 'பிச்சைக்காரன் 2' படத்தில் இருந்து ரொமான்டிக் பாடல் வெளியாகியுள்ளது.
 

Share this Video

விஜய் ஆன்டனி நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான, 'பிச்சைக்காரன்' படத்தின் வெற்றியை தொடர்ந்து, நாளை (மே 19) ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் பிச்சைக்காரன் 2. இந்த படத்தின் புரோமோஷன் பணிகள் தற்போது பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், இப்படத்தில் விஜய் ஆன்டனியின் ரொமான்டிக் காதல் பாடலான 'கல்லூரும் பூவ' பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

விஜய் ஆன்டனி ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தை அவரே இயக்கியுள்ள நிலையில், மனைவியுடன் சேர்ந்து தயாரித்தும் உள்ளார். மேலும் இப்படத்தின் இசையமைப்பு மற்றும் படத்தொகுப்பு பணிகளையும் அவரே மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் விஜய் அன்டனிக்கு ஜோடியாக காவ்யா தப்பர் நடித்துள்ளார். 

முதல் பாகம் அம்மா சென்டிமென்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த நிலையில், இரண்டாம் பாகம்... தங்கை சென்டிமென்ட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Related Video