watch : மஸ்காரா பாடலுக்கே டஃப் கொடுக்கும் போல..! வைரலாகும் ‘பிச்சைக்காரன் 2’ பட ஐட்டம் சாங் ‘நாநா புலுக்’

பிச்சைக்காரன் 2 திரைப்படத்திற்காக விஜய் ஆண்டனி இசையமைத்த நாநா புலுக் என்கிற ஐட்டம் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

Share this Video

இசையமைப்பாளர், நடிகர், பாடகர் என பன்முகத்திறமை கொண்டவராக வலம் வரும் விஜய் ஆண்டனி, தற்போது இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ளார். அந்த வகையில் அவர் இயக்கி உள்ள முதல் திரைப்படம் பிச்சைக்காரன் 2. இப்படத்தின் முதல் பாகம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதால், அதன் இரண்டாம் பாகத்திற்கும் எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.

அந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் விதமாக இப்படத்தின் டிரெய்லர் அமைந்திருந்தது. இப்படத்தில் விஜய் ஆண்டனி இரட்டை வேடத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. பிச்சைக்காரன் 2 திரைப்படம் வருகிற மே 19-ந் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் அதன் அப்டேட்டுகளும் அடுத்தடுத்து வெளியிடப்பட்டு வருகின்றன.

அதன்படி பிச்சைக்காரன் 2 படத்தில் இடம்பெறும் ஐட்டம் சாங்கை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. நாநா புலுக் என வித்தியாசமான பெயருடன் கூடிய இப்பாடலைப் பார்த்த ரசிகர்கள் மஸ்காரா பாடலுக்கு டஃப் கொடுக்கும் வகையில் இந்த பாடல் அமைந்துள்ளதாக பதிவிட்டு வருகின்றனர்.

Nana Buluku - Video Song | Pichaikkaran 2 | Vijay Antony | Kavya Thapar | Khareshma

Related Video