ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த விக்கி - நயனின் திருமண வீடியோ... டீசரோடு நெட்பிளிக்ஸ் வெளியிட்ட ரிலீஸ் அப்டேட்

நடிகை நயன்தாரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமண வீடியோவின் ரிலீஸ் அப்டேட் உடன் கூடிய வீடியோவை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வெளியிட்டு உள்ளது.

Share this Video

இயக்குனர் விக்னேஷ் சிவனை 7 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்த நடிகை நயன்தாரா, கடந்த ஜூன் மாதம் 9-ந் தேதி திருமணம் செய்துகொண்டார். மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் இவர்களது திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவர்களது திருமணத்தில் ஏராளமான திரையுலக பிரபலங்களும் கலந்துகொண்டனர். இவர்களது திருமண வீடியோவை ஒளிபரப்பும் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியது. இதுகுறித்த டாக்குமெண்ட்ரியை இயக்குனர் கவுதம் மேனன் இயக்கி உள்ளார். 

இவர்களுக்கு திருமணமாகி 100 நாட்களுக்கு மேல் ஆகும் நிலையில், தற்போது அந்த திருமணம் வீடியோ விரைவில் ரிலீசாகும் என குறிப்பிட்டு டீசர் ஒன்றும் வெளியிடப்பட்டு உள்ளது. அடுத்தமாதம் இவர்களது திருமண வீடியோ நெட்பிளிக்ஸில் வெளியிடப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

Related Video