Watch : ‘விடுதலை’ சிங்கிள் ஷாட் ரெயில் விபத்து காட்சி... உருவானது எப்படி? - மிரள வைக்கும் மேக்கிங் வீடியோ இதோ

விடுதலை படத்தில் ரசிகர்களை பிரம்மிக்க வைத்த ரெயில் விபத்து காட்சியை சிங்கிள் ஷாட்டில் படமாக்கியது எப்படி என்பது குறித்த மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

Share this Video

வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிநடைபோட்டு வருகிறது. இப்படம் பார்த்த ரசிகர்களை பிரம்மிக்கவைத்த காட்சி என்றால் அது ரெயில் விபத்து காட்சி தான். இந்த காட்சியை சிங்கிள் ஷாட்டில் படமாக்கி இருந்தார் வெற்றிமாறன். அந்த பிரம்மிப்பூட்டும் காட்சியின் மேக்கிங் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சென்னை அருகே செட் போட்டு தான் இந்த காட்சியை படமாக்கி உள்ளனர். இந்த காட்சிக்காக மொத்தம் 9 நாட்கள் ரிகர்சல் செய்து 10-வது நாளில் தான் இதனை சிங்கிள் ஷாட்டாக படமாக்கினாராம் வெற்றிமாறன். இந்த சிங்கிள் ஷாட் காட்சியை படமாக்க மட்டும் கிட்டத்தட்ட 8 கோடி வரை செலவழித்து உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த காட்சியை படமாக்கியபோது தான் எதிர்பாராத விபத்து நிகழ்ந்து படப்பிடிப்பு தளத்தில் ஸ்டண்ட் கலைஞர் ஒருவர் உயிரிழந்தார். இத்தனை வலிகளுக்கு நடுவே படமாக்கப்பட்ட அந்த சிங்கிள் ஷாட் காட்சி படம் பார்க்கும் ரசிகர்கள் எப்படி பிரம்மிக்க வைத்ததோ, அதேபோல் அதன் மேக்கிங் வீடியோவும் பிரம்மிப்பூட்டும் வகையில் அமைந்துள்ளது.

Related Video